தமிழகத்தில் தமிழ் மரபு அறக்கட்டளைக்கு ஒரு அலுவலக அறை


தமிழ் மரபு அறக்கட்டளையின் பல்வாரியான செயல் நடவடிக்கைகளை மேற்கொள்ள நிரந்தரமான அலுவலக இடம் தேவை. இதனை மனதில் கொண்டு கடந்த இரண்டாண்டுகளாக தமிழகத்தில் முயற்சிகளில் ஈடுபட்டிருந்தோம். நமது தேவையை நன்கு உணர்ந்த முனைவர் அனந்தகிருஷ்ணன் அவர்கள் இம்முறை வேலம்மாள் பொறியியல் கல்லூரியின் முதல்வர் திரு. முத்துராமலிங்கம் அவர்களிடம் நமது தேவையை எடுத்துரைத்தார். அதனைத் தொடர்ந்து சுவடியர்கள் சுபா மற்றும் அண்டோ பீட்டர் இருவரும் அவரது அலுவலத்திற்கு நேரடியாகச் சென்று அலுவலகம் மற்றும் அலுவலகத்திற்குத் தேவையான கணினி போன்றவற்றை கேட்டுப் பெற சென்றிருந்தனர். சமூக சேவையாளர் திரு முத்துராமலிங்கம் அவர்கள் மனமுவந்து தமது பல்கலைக்கழக அலுவலகக் கட்டிடத்தின் மேல் மாடியில் அமைந்துள்ள ஒரு அறையினை தமிழ் மரபு அறக்கட்டளைக்காக வழங்கியுள்ளார்கள்.வேலம்மாள் பொறியியல் கல்லூரி - நுழைவாயில்அலுவலக அறை அமைந்துள்ள கட்டிடம்வேலம்மாள் பொறியியல் கல்லூரியின் முதல்வர், (உரிமையாளர்) திரு.முத்துராமலிங்கம் அவர்கள்தமிழ் மரபு அறக்கட்டளைக்காக வழங்கப்பட்டுள்ள அறைப்பகுதிஅலுவலக அறையின் வாசல்தமிழ் மரபு அறக்கட்டளைக்காக வழங்கப்பட்டுள்ள அறையின் பக்கத்தில் உள்ள மொட்டை மாடி.


Copyright: THF August 2003