E-Suvadi
Centuries before the invention of printing, Tamils have recorded much of Tamil's literary and scientific heritage on the
readily available medium of dried, smoothed and smoke-treated leaves of talipot (olai in Tamil) palm trees. Over a million
such manuscripts face decay and disintegration before getting published. They need to be digitized, catalogued, documented and preserved.
Even the printed books, not seeing any reprinting, face the same fate. They need preservation as well.
An Email forum called E-Suvadi (Electronic Manuscripts) has been formed specifically to discuss and coordinate such activities and
to identify collaborative partners around the world. This forum can be located at E-Suvadi
அச்சுக் கூடங்கள் தமிழுக்கு அறிமுகமாகு முன் தமிழர்கள் மரபுச் சேதிகளைப் பனையோலைகளில் எழுதி
பல்லாண்டு காலங்களாகப் பத்திரப்படுத்தி வந்தனர். ஆயினும் மர இலையிலான இவ்வூடகம் காலத்தால் அழிவுறக்கூடியதே.
இத்தகைய பதிவுகள் இன்னும் ஐந்து, பத்து வருடங்களில் இலக்கப் பதிவாக்கப் பட்டு நிரந்தரப் படுத்தப் படவில்லையெனில்
ஏறக்குறைய 10 இலட்சம் சுவடிகளில் பதிவுற்ற கலை, இலக்கிய, மருத்துவ, வானியல் மற்றும் பல்கலைச் செல்வங்கள்
என்னவென்று அறியப்படாமலே அழிந்து போக வாய்ப்புள்ளது. 15ம் நூற்றாண்டு தொடக்கம் பதிவுற்ற (அச்சு) நூல்களுக்கும்
இதே கதிதான். எனவே இவை முறையாக இலக்கப் பதிவாக்கப்படத் தேவையான விஷயங்களை அலச 'இ-சுவடி (இலத்திரன்
சுவடி) என்றொரு மடலாடற்குழு உருவாக்கப் பட்டுள்ளது. தமிழ் மரபின் மீது ஆர்வமுள்ள எவரும் 'இ-சுவடியில்' உறுப்பினராகி பங்குபெறலாம்.