இந்த சிறப்புப் பகுதியில் பேராசிரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளை (1891 - 1956) அவர்களின் தமிழ் ஆய்வுச் செய்திகள் சேர்க்கப்பட்டுள்ளன.

தமிழ் நூற்பதிப்புத் துறையில் சிறந்த பதிப்பாசிரியராக விளங்கியவர். தமிழில் சிறந்த புலமை உள்ளவர்; ஆய்வுக கட்டுரையாளர், திறனாய்வாளர், கால மொழி ஆராய்ச்சியாளர், மொழி பெயர்ப்பாளர், சொற்பொழிவாளர் கதை கவிதைகள் புனையும் திறம் படைத்தவர் என பல்முக பரிமாணங்களைக் கொண்டவர்.

இவர் 1922 முதல் ஓலைச்சுவடிகளிலிருந்து புதிதாகவும், முன்னரே பதிப்பு செய்யப்பட்ட நூல்களிலிருந்து மறுபதிப்பாக்கமும் செய்யும் தமிழ்ப்பணியை மேற்கொண்டிருந்தார். 1922ம் ஆண்டில் முதன் முதலாக இவர் பதிப்பித்த நூல் மனோன்மணீயம்.
பேராசிரியரின் தமிழ் பணி குறித்த தகவல்களை பேராசிரியரின் பேத்தியும், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக தமிழ்த்துறை தலவருமான பேராசிரியர் முனவர் ராதா செல்லப்பன் வழங்கியுள்ளார்கள். இவர் வழங்கிய பல தகவல்கள் ஒலிக்கோப்புகளாக இப்பக்கத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த ஒலிப்பதிவுகள் 01.12.2007 அன்று பதிவு செய்யப்பட்டன. பேராசிரியர் முனவர் ராதா செல்லப்பன் அவர்களை தமிழ் மரபு அறக்கட்டளைக்காக பேட்டி கண்டவர் முனைவர். சுபாஷிணி.
பேட்டி ஒலிக் கோப்புகள்

பேராசிரியர் முனவர்.ராதா செல்லப்பன்
பாகம் 01- வாழ்க்கை சரித்திரம், குடும்பம், வகித்த பொருப்புக்கள், தமிழ் ஈடுபாடு.
பாகம் 02 - தமிழறிஞர்களுடனான தொடர்பு, பாரதியார் சந்திப்பு, சிறப்பு பண்புகள், ஆய்வில் நாட்டம்
பாகம் 03 - தமிழ் மொழி செயல்பாடுகள், தமிழ் பேரகராதி, சொல்லாராய்ச்சி, பதிப்புக்கள்.
பாகம் 04- புரத்திரட்டு நூல்கள் பதிப்பாக்கங்கள், தொடர் தமிழ் ஆய்வுகள், வகித்த பொறுப்புக்கள், சங்க இலக்கிய சொல்லடைவு பணிகள்.
பாகம் 05- இலக்கிய ஆர்வம், ஆய்வுத் திறம், உ.வே.சா பற்றிய கருத்துக்கள், ஆற்றிய சொற்பொழிவுகள் மற்றும் இலக்கிய உரைகள், மொழி கோட்பாடுகள்.
பாகம் 06- இலக்கிய படைப்புக்கள், சிறுகடைகள், கவிதகள், தமிழ் இலக்கிய கால ஆராய்ச்சிகள், திறனாய்வுப் பணிகள், திராவிட மொழி ஆய்வுகள்.
பாகம் 07- பிற மொழி இலக்கிய ஆய்வுகள், மொழி பெயர்ப்புக்கள், முதல் பதிப்பு, மற்ற பிற பதிப்புக்கள், தமிழ் அகராதி மற்றும் நிகண்டு பற்றிய செய்திகள்.
பாகம் 08- ஒப்பிலக்கிய ஆய்வுகள், அகராதி ஆய்வுகள் பட்டியல்களின் தேவைகள், நிகண்டுகள் பற்றிய மேலும் பல செய்திகள், தமிழ் அகராதியில் ஆதார நூல் தொகுதிகள், எழுதி வெளியிட்டுள்ள வாழ்க்கை வரலாற்றுக் கட்டுரைகள்.
பாகம் 09- மொழிகள், வட மொழி பற்றிய கருத்துக்கள், ஆங்கில மோகம் பற்றிய கருத்து.
பாகம் 10- பயிற்று மொழி சிந்தனை, தமிழ் மொழியே பயிற்று மொழி, தமிழின் வழி அறிவியல் கல்வியின் தேவைகள், கவிமணியோடு நட்பு, பிற நூற்களுக்கு வழங்கிய முன்னுரைகள் பற்றிய செய்தி, இலக்கியமும் சமூகமும்.
பாகம் 11- தமிழ் மொழி எதிர்கால ஆய்வு பற்றிய கணிப்பு.
எழுதிய நூல்கள்
1930 - ஆராய்ச்சி உரை தொகுப்பு, ஆசிரியர் வெளியீடு.
1944 - சிறுகதை மஞ்சரி, தினமணி வெளியீடு.
1946 - Research in Dravidian Language, Madras Premier Co., Madras.
1947 - இலக்கியச் சிந்தனைகள், பாரி நிலையம்.
1949 - தமிழர் பண்பாடு, தமிழ்ப் புத்தகாலயம்.
1950 - கம்பன் ஆராய்ச்சிப் பதிப்பு, கம்பன் கழகம், காரைக்குடி.
1951 - உரைமணிமாலை, ஆசிரியர் பதிப்பு.
1952 - இலக்கிய தீபம், பாரி நிலையம்.
1952 - இலக்கிய உதயம் (பகுதி 2), தமிழ்ப் புத்தகாலயம்.
1954 - இலக்கிய மணிமாலை, தமிழ்ப் புத்தகாலயம்.
1955 - கம்பன் காவியம், தமிழ்ப் புத்தகாலயம்.
1956 - இலக்கணச் சிந்தனைகள், பாரி நிலையம்.
1956 - திராவிட மொழிகளில் ஆராய்ச்சி, தமிழ்ப் புத்தகாலயம், இரண்டாம் பதிப்பு.
1956 - History of Tamil Language & Literature, NCBH
1956 - சொற்கலை விருந்து, பாரி நிலையம்.
1957 - காவியகாலம், தமிழ்ப் புத்தகாலயம்.
1958 - இலக்கிய விளக்கம், தமிழ்ப் புத்தகாலயம்.
1958 - ராஜி
1959 - தமிழ்ச் சுடர்மணிகள், பாரி நிலையம், மூன்றாம் பதிப்பு.
1959 - அகராதி நினைவுகள், தமிழ்ப் புத்தகாலயம்.
1960 - தமிழின் மறுமலர்ச்சி, பாரி நிலையம், நான்காம் பதிப்பு.
பதிப்பித்துள்ள நூல்கள்
1.மனோண்மணியம், 1922.
2.துகில்விடு தூது, 1929.
3.நாமதீப நிகண்டு, 1930.
4.அரும்பொருள் விளக்க நிகண்டு, 1931.
5.களவியற்காரிகை, 1931.
6.கம்பராமாயணம்-யுத்த காண்ட1-3 படலம்), 1932.
7.குருகூர் பள்ளு, 1932.
8.திருக்குருங்குடி அழகிய நம்பி உலா, 1932.
9.தினகர வெண்பா, 1932.
10.நெல்விடு தூது, 1933.
11.தொல்காப்பியம்-(பொருளதிகாரளம, இளம்்பூரணம்), 1933.
12.திருமந்திரம் (சேர்ந்து பதிப்பித்தது), 1933.
13.திருமுருகாற்றுப்படை (சேர்ந்து பதிப்பித்தது, புதிய உரையுடன்), 1933.
14.கம்பராமாயணம்-பால காண்டம் (1-7படலம்), 1933.
15.பூகோள விலாசம், 1933.
16.திருப்பணி மாலைகள் (தென்திருப்பேரை, திருக்கோளூர்),1933.
17.மூப்பொந்தொட்டி உலா, 1934.
18.பொதிகை நிகண்டு, 1934.
19.இராஜராஜதேவர் உலா, 1934.
20.தொல்காப்பியம்-பொருளதிகாரம் (நச்சினார்க்கினியம்),1934.
21.இராமலிங்கேசர் மீது பணவிடு தூது, 1934.
22.மதுரைக் கோவை, 1934.
23.தெய்வச்சிலையார்விறலிவிடு தூது, 1936.
24.புறத்திரட்டு, 1938.
25.கயாதாரம், 1939.
26.சங்க இலக்கியபத்துப் பாட்டும் எட்டுத் தொகையும்), 1940.
27.சீவக சிந்தாமணி, 1941.
28.சாத்தூர் நொண்டி நாடகம், 1941.
29.நவநீதப் பாட்டியல்-உரையுடன், 1943.
30.திருமுருகாற்றுப்படை-பழைய உரை, 1943.
31.நான்மணிக்கடிகை, 1944.
32.இன்னா நாற்பது, 1944.
33.திரிகடுகமும் சிறுபஞ்ச மூலமும், 1944.
34.இனியவை நாற்பது, 1949..
35.இராமப்பய்யன் அம்மானை, 1950.
36.முதலாயிரம், 1955.
37.திருவாய்மொழி.
38.கொண்டல் விடு தூது.
** முனைவர் ராதா செல்லப்பன் அவர்களின் "ஆய்வு நெறியும் வையாபுரியும்" எனும் நூலிலிருந்து தொகுக்கப்பட்டவை.
வாழ்க்கை வரலாறு
பேராசிரியர் எஸ் வையாபுரிப்பிள்ளை அவர்களின் மகள் திருமதி தங்கம்மாள் எழுதிய " என் தந்தையார் பேராசிரியர் எஸ் வையாபுரிப்பிள்ளை" எனும் நூலிலிருந்து வாசித்து தமிழ் மரபு அறக்கட்டளையின் "மண்ணின் குரல்" பகுதியில் பதிப்பிக்கப்பட்டுவரும் ஒலிக்கோப்புக்களை இங்கே கேட்டு மகிழலாம். வாசித்து வழங்குபவர் முனைவர்.க சுபாஷிணி.
பாகம் 01
திரும்பிச் செல்ல .... [சுவடியியல்]
|