தமிழ் மரபு அறக்கட்டளை
பேராசிரியர்.முனைவர்.இரா.மாதவன் - ஓலைச்சுவடி ஆய்வுகள்
 
இப்பகுதியில் உங்களுக்காக......ஒலிக்கோப்புக்கள், புத்தகங்கள், படத்தொகுப்பு, மற்றும் பல
|| வணக்கம்

இந்த சிறப்புப் பகுதியில் தமிழ் பலகலைக்கழகத்தின் சுவடிப்புலத்தின் ஆய்வுத்துறை தலைவர் பேராசிரியர்.முனைவர்.இரா.மாதவன் அவர்களின் சுவடிகள் சம்பந்தப்பட்ட பல ஆய்வுச் செய்திகள் சேர்க்கப்பட்டுள்ளன.சுவடிகள் ஆய்வுகள் பற்றி இவர் வழங்கிய பல தகவல்கள் ஒலிக்கோப்புகளாக இப்பக்கத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த ஒலிப்பதிவுகள் த்ஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் 29.11.2007 அன்று பதிவு செய்யப்பட்டன. பேராசிரியர்.முனைவர்.இரா.மாதவன் அவர்களை தமிழ் மரபு அறக்கட்டளைக்காக பேட்டி கண்டவர் சுபாஷினி கனகசுந்தம்.

பேட்டி ஒலிக் கோப்புகள்

பாகம் 01 - தஞ்சை தமிழ் பல்கலைக்கழக சுவடிப்புலம் - அறிமுகம், நோக்கம், நடவடிக்கைகள், நடைபெற்று வரும் ஆய்வுகள், துறை பேராசிரியர்கள் பற்றிய விவரங்கள்.

பாகம் 02 - பதிப்பிக்கப்பட்ட நூல்கள், துறை அறிஞர்களுக்கான தகுதிகள், ஓலைகள் பதிப்புக்கும் முறைகள்

பாகம் 03 - ஓலைசுவடி அச்சிடும் முறை, அச்சுப் பதிப்பில் வந்த ஆரம்பகால நூல்கள், பதிப்பாசிரியர்கள்

பாகம் 04 - மின்பதிப்பாக்கம் ஏன் தேவை, ஓலைச்சுவடிகளை ஏன் பாதுகாக்கா வேண்டும், தமிழின் தொன்மை

பாகம் 05 - மொழிகளின் தொன்மை, தமிழின் தொன்மை, ஓலைச்சுவடிகள் எப்படி படி எடுத்து பாதுகாக்கப்பட்டன, ஓலையில் எழுதும் முறை, எழுத்துக்கள், சுவடி எழுத்துப் பயிற்சி

பாகம் 06 - சுவடியில் எழுத்துக்கள், சுவடி எழுத்துக் கலை

பாகம் 07 - சுவடியில் உள்ள விஷயங்கள், சித்த மருத்துவ சுவடிகள், மருத்துவ முறை விளக்கம் சொல்லும் சுவடிகள், சுவடிகளில் கண் மருத்துவம்

பாகம் 08 - ஓலைச் சுவடிகளின் அழிவுக்கு எது காரணம்?, எப்படி சுவடிகளை பாதுகாப்பது?

பதிப்பித்துள்ள நூல்கள்

1.கண்மருத்துவம் - சுவடிப்பதிப்பு 1982ஆம் ஆண்டிற்கான் தமிழக அரசின் சிறந்த மருத்துவ நூலுக்கான முதற்பரிசு பெற்றது.
2.சித்திரக்கவிகள் - ஆய்வுப்பதிப்பு 1983 ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் சிறந்த மொழி இலக்கியம் பற்றிய ஆய்வு நூலுக்கான முதற்பரிசு பெற்றது.
3.மீனாட்சியம்மன் திருப்புகழ் - சுவடிப்பதிப்பு
4.விராலிமலை வேலவர் குறபவஞ்சி - சுவடிப்பதிப்பு
5.Siddha medical Manuscripts in Tamil
6.Heritage of Tamils - Siddha Medicine
7.Heritage of Tamils - Education and Vocation
8.தமிழ்ச்சுவடி விளக்க அட்டவணை - முதல் தொகுதி
9.தமிழ்ச்சுவடி விளக்க அட்டவணை - இரண்டாம் தொகுதி
10.தமிழ்ச்சுவடி விளக்க அட்டவணை - மூன்றாம்் தொகுதி
11.தமிழ்ச்சுவடி விளக்க அட்டவணை - நான்காம் தொகுதி
12.வைத்தீசுவரன் கோயில் பதிகங்கள் - சுவடிப்பதிப்பு
13.திருவேங்கடவன் திருப்பாமாலை - சுவடிப்பதிப்பு
14.வருமைக்கு விடைகொடுத்த ஏழேழு வெண்பா மாலை - சுவடிப்பதிப்பு
15.வேலூர் பதிகங்கள் - சுவடிப்பதிப்பு
16.நலம் தரும் நாராயண கவசம்.
17.வீரகேரளம்புதூர் நவநீதகிருட்டிணன் கலம்பகம் - சுவடிப்பதிப்பு
18.திவ்விய தம்பதியர்புகழ்மாலை - சுவடிப்பதிப்பு
19.அகத்தியர் வைத்திய காவியம்-1500 - சுவடிப்பதிப்பு
20.சென்னை கந்தகோட்ட முருகன் ஆறாறு மாலை
21.அருள்மிகு பல்கலை விநாயகர் போற்றி மாலை
22.தஞ்சை கோயிற் பாடல்கள் - சுவடிப்பதிப்பு
23.அருள்மிகு சந்தான ஈஸ்பவரி திருப்பள்ளியெழுச்சி
24.அருள்மிகு சந்தான ஈஸ்பவரி 1008 நாமாவளி
25.அருள்மிகு சந்தான ஈஸ்பவரி சதகம்
26.அருள்மிகு கிழத்தெரு மாரியம்மன் போற்றி மாலை
27.தமிழில் பதின்மர் சிவார்ச்சனை
28.சேக்கிழார் நூற்றந்தாதி - சுவடிப்பதிப்பு
29.வத்திய சிந்தாமணி - சுவடிப்பதிப்பு
30.குழந்தைகள் மகளிர் மருத்துவம் - சுவடிப்பதிப்பு
31.தன்வந்திரி வைத்தியக்கும்மி - சுவடிப்பதிப்பு
32.தணிகைவேள் பாரதியார் பிரபந்தத்திரட்டு - சுவடிப்பதிப்பு
33.டாக்டர்.உ.வே.சா செவ்வைச்சூடுவார் பாகவதப் பதிப்பு
34.தமிழில் தலபுராணங்கள் - முதல் தொகுதி
35.தமிழில் தலபுராணங்கள் - இரண்டாம் தொகுதி
36.தமிழில் தூது இலக்கியம்
37.தண்டபாணி சுவாமிகள் ஆய்வு மாலை - முதல் தொகுதி
38.தண்டபாணி சுவாமிகள் ஆய்வு மாலை - இரண்டாம்் தொகுதி
39.குமரகுருபரர் ஆய்வு மாலை - முதல் தொகுதி
40.குமரகுருபரர் ஆய்வு மாலை - இரண்டாம் தொகுதி
41.குமரகுருபரர் ஆய்வு மாலை - மூன்றாம்் தொகுதி
42.மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை ஆய்வுமாலை - முதல் தொகுதி
43.மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை ஆய்வுமாலை - இரண்டாம் தொகுதி
44.பெரும்புலவர் மீனாட்சி சுந்தரம் பிள்ளை
45.நான்மணிக்கடகை - மூலமும் பயழையவுரையும் - சுவடிப்பதிப்பு
46.சுவடிப்பதிப்பியல்

படத்தொகுப்பு

தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் சுவடிப்புலத்திற்குச் சென்றிருந்த போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம்.

திரும்பிச் செல்ல .... [சுவடியியல்]

Released on 01.01.2008, This page is written for Tamil Heritage Foundation by Subashini Kanagasundaram.
 
Basic template designed by CMG Technologies.