தமிழ் வளர்ச்சித்துறை செயலர் டாக்டர் செல்வராஜ் இஆப அவர்களது அலுவலகத்தில் ஜூன் 8, 2023 காலை தமிழ் மரபு அறக்கட்டளை தமிழ் வளர்ச்சிக்கான பரிந்துரைகளை வழங்கி [http://thf-news.tamilheritage.org/wp-content/uploads/2023/06/தமிழ்-வளர்ச்சித்-துறை-த.ம.அ-பரிந்துரைகள்-062023.pdf] அவை பற்றிய கலந்துரையாடலை நிகழ்த்தினோம். எங்களுடன் இந்தக் கலந்துரையாடலில் செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் சந்திரசேகர் அவர்களும் ஆய்வாளர்களும் கலந்து கொண்டனர்.தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் சார்பில் என்னுடன் டாக்டர் கண்ணன் மற்றும் க்ரிஷ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.உலகளாவிய அளவில் தமிழ் ஆய்வுகள் நடவடிக்கைகள் தொடர்பாக பயனுள்ள பல விஷயங்களை இந்தச் சந்திப்பில் கலந்துரையாடினோம்.
முனைவர்.க.சுபாஷிணி
தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு