சென்னை பச்சையப்பர் கல்லூரி வளாகத்தில் வள்ளல் பச்சையப்பர் நினைவு நாளான மார்ச் 31, 2023 அன்று கல்லூரியினரும் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் தமிழ்நாடு செயற்குழுவினரும் தமிழ்த் தோட்டம் என்ற பசுமை விழா நிகழ்வைத் தொடக்கி வைத்தனர்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு சென்னையின் சிறப்புமிக்க பச்சையப்பா கல்லூரியின் தமிழ்த்துறையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்த செய்தியைப் பகிர்ந்திருந்தோம்.
அவ்வகையில் இணைந்த வகையிலான பணிகளைத் தமிழ் மரபு அறக்கட்டளை வருகின்ற வெள்ளிக்கிழமை 31ஆம் தேதி மார்ச் மாதம் 31ஆம் தேதி பச்சையப்பர் கல்லூரியில் தொடங்கினோம். வள்ளல் பச்சையப்பர் நினைவைப் போற்றும் வகையில் கல்லூரி வளாகத்தில் தமிழ்த் தோட்டம் உருவாக்கும் பணி இந்த நாளில் தொடங்கப்பட்டது என்ற செய்தியைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி கொள்கின்றோம்.
இயற்கையோடு இணைந்த வகையில் மாணவர்களின் கல்விச் செயல்பாடுகள் இயங்கும் போது மாணவர்களுக்குக் கல்வியில் ஆழமான ஈடுபாடு தோன்றும். ஆசிரியர்களும் மாணவர்களும் புத்துணர்ச்சியுடன் செயல்பட வழிவகுக்கும் என்ற நோக்கத்துடன் இந்தத் தமிழ்த் தோட்டம் என்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் வழி கல்லூரியின் பசுமையான பகுதிகள் பாதுகாக்கப்பட்டும் தாவர வகைகள் நட்டுப் பராமரிக்கும் செயல்பாடுகள் தொடங்கப்படுவதும் நடைபெறவிருக்கிறது.
காணொளி: https://youtu.be/2ZDQkiPSN8g