வீரத்திலும், கலைகளிலும், இலக்கியத்திலும் தடம் பதித்தவன் பல்லவ மாமன்னன், மகேந்திரவர்மன். அவன் பெயர் சொல்லும் குடைவரைக் கோயில்களில் மகேந்திரவாடி தனிச்சிறப்பிடம் பெறுகின்றது.
மகேந்திரவாடி – குடைவரைக் கோயிலின் வரலாறு, இக்கோயிலில் அமைந்துள்ள கல்வெட்டுக்கள், கோயிலின் கட்டுமான அமைப்பு பற்றி விரிவாக விளக்குகின்றார் ஓய்வு பெற்ற தமிழகத் தொல்லியல் அறிஞர் திரு.ஸ்ரீதரன் அவர்கள்.
இக்குடைவரையில் பொதுமக்களால் ஏற்படுத்தப்பட்டுள்ள சேதங்களையும் இந்த விழியப் பதிவு காட்டுகின்றது. புராதனச் சின்னங்களை எப்படி பாதுகாக்க வேண்டும் என்ற சிந்தனையில்லாத சூழலில் தமிழக கட்டுமான அதிசயங்கள் பாதிக்கப்படுவது தொடர்வது வேதனையே.
வரலாற்றினை தொல்லியல் அறிஞர்களின் வழிகாட்டுதலுடன் கற்பதும் அறிதலும் தேவை. அதனையே தமிழ் மரபு அறக்கட்டளையின் இந்தப் பயணம் சாத்தியப்படுத்தியுள்ளது.
விழியப் பதிவை முழுமையாகக் கண்டு, ஏறக்குறைய 1400 ஆண்டுகள் பழமையான இந்தக் கோயிலின் வரலாற்றை அறிவோம்.
விழியப் பதிவு: முனைவர்.க.சுபாஷிணி ( THFi ஜெர்மனி)
விழியப் பதிவு தொகுப்பாக்கம்: முனைவர்.தேமொழி (THFi கலிஃபோர்னியா)
அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]