உசிலம்பட்டி எழில் அறக்கட்டளை மூலமாக பனை விதைகளை அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்திற்கு திரு.சண்முகம், அவர்கள் திரு.பாலசந்தர் அவர்களிடம் கேட்டுக்கொண்டார். இதை ஜெயங்கொண்டம் அரிமா சங்கம் சார்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் பனை விதைகளை நட திட்டமிட்டுள்ளனர். இப்பணியில் திரு.பாலச்சந்தர் அவர்கள் நமது த.ம.அ மாணவர் மரபு மையத்தையும் இணைத்திட விரும்பி மாணவச் செல்வங்களிடம் பனையின் நன்மைகளை கூறி சேகரித்து வர கோரிக்கை வைத்தார்.
விடுமுறை நாளான ஞாயிறு அன்று மட்டும் சுமார் 80 க்கு மேற்பட்ட விதைகளை சேகரித்து வந்தனர்.
மேலும், திரு.பாலச்சந்தர் அவர்களின் மரம் ஏறக்கூடாது என்ற அன்புக் கட்டளையால் கீழே விழுந்த பனம் பழங்களை மட்டுமே சேகரித்து வந்தனர்.