1919ம் ஆண்டு திரு.சூ.ஆ.முத்து நாடார் தொடக்கிய ஒரு பத்திரிக்கை நாடார்கள் சமூகத்துக்கு மாத்திரமல்லாமல் சுதந்திர எண்ணத்தை விரிவாக்கச் செயலாற்றியதில் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் திகழ்ந்தது. ‘நாடார் குல மித்திரன்’ எனப் பெயரிட்டு இந்தப் பத்திரிக்கையின் முழு பொறுப்பையும் எடுத்துச் செயல்பட்டு வந்தார் இவர்.அருப்புக்கோட்டையிலிருந்து தாமே ஆசிரியராகவும் திரு.சொக்கலிங்கபாண்டியன் என்பவரை உதவி ஆசிரியராகவும் கொண்டு பணியாற்றினார்.
இந்த மாதாந்திர வெளியீடாக வந்த நாடார் குல மித்திரன் 1919 தொடங்கி, பிறகு வார இதழ்களாக 1931ம் ஆண்டு வரை 12 ஆண்டுகள் தொடர்ந்து வெளி வந்தது. அரசியல் கொள்கைகளோடு நாடார் சமூகத்து மக்களின் மேம்பாட்டிற்காகப் பல சிந்தனைகளை வித்திட்ட ஒரு சஞ்சிகையாகவும் இது திகழ்ந்தது.
சமூக வரலாற்றில் ஆர்வம் உள்ளோர், அதிலும் குறிப்பாகத் தமிழகத்தின் 20ம் நூற்றாண்டின் ஆரம்பக் கால அரசியல் சமூக நிலையில் ஆர்வம் உள்ளோர்களுக்கு இந்தத் தொகுப்புக்கள் அனைத்தும் விருந்தாக அமையும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
தொகுப்பு: முனைவர். தேமொழி
“நாடார் குல மித்திரன்”
1919-1928 ஆண்டு வெளியான இதழ்கள்