தமிழ்மொழியில் முதல்முதலாக தரங்கம்பாடியில் அச்சாகிய புத்தகத்தின் முதற்பக்கம்


சென்னையில் 1968 ம் ஆண்டு நடைபெற்ற உலகத்தமிழ் மாநாட்டு விழா மலரில் வெளியிடப்பட்டது






இன்றைக்கு(2002) 287 ஆண்டுகளுக்கு முன்பு 1714 இல் அச்சாகிய இவ்விதழில் அந்நாளில் தமிழ் ஓலைச்சுவடிகளில் எழுதும் போது எகரத்திற்கும் மெய்களுக்கும் புள்ளியிடாமலும் ஆகாரக்காலிற்கும் ரகரத்திற்கும் வேறுபாடு இன்றியும் எழுதுவார்களோ அவ்வாறே எழுதப்பட்டுள்ளது. எகர ஒகர ஒற்றைச்சுழிக்கொம்பு ஏகார ஓகார இரட்டைச்சுழிக்கொம்பு என இரண்டுவகை இல்லாமை காண்க. { ஓலை அல்லாது வேறு பொருளில் எழுதுங்கால் கொம்பு ( ஒற்றைச்சுழி ) உயிர்மெய் நெடிலில்தான் புள்ளி பெறாது. குறிலில் புள்ளி பெறும் } அதான்று மொழியறிவு சிறிது குறைந்தோர் எழுதுகின்ற நடையிலும் வரி மாறும் இடங்களில் சொல்லே இடையிலே உடைபட்டுள்ளதும் காண்க.



சுதனாகியசறுவேசுரனாயிருக்கிற
ஏசுக்கிறீஷ்த்து
நாதரானவர்
இந்தப்பூலோகத்திலேமனுஷனாய்ப்பிறந்தவிசேஷங்க
ளையும்போதிவிச்சஞான உபதேசங்களையும்செய்தஅ
ற்புதங்களையும்மனுஷருக்குவேண்டிபாடுபட்டு
எல்லாரையும்மூண்டுரெஷ்சித்தவத்தவானங்களையும்
உயிரோடேஎழுந்திருந்துபரலோகத்திலேமகிமையாக
ஏறினத்தையும்அவருடையசீஷர்களாகிறஅப்போஷ்
த்தலமார்கள் லோகமெங்கும்போய் இப்படிக்கொத்த
ச்சுவிவிசேஷங்களைச்சகலச்சனங்களுக்கும்பிறசங்க
ம்பண்ணினதையும்வெளிப்படுத்துகிறபுதுஏ
ற்பாட்டினுடையமுதலாம்வகுப்பாகிற
அஞ்சுவேதபொஷ்தகம்


கிறீஷ்துபிறந்தஆயிரத்துஎழுதூத்துபதினாலாம் வரு ஷமாகிறபோதுயிதுதரங்கன்பாடியிலேயிருக்கிற பாதிரிமார்களுடையஅச்சிலேபதிக்கப்பட்டது.


[ நன்றி: இத்தகவலும் gif படமும் மரபு அணில் திரு லோகசுந்தரம் அவர்களால் அனுப்பப்பட்டது. ]


Designed by: Suba :-Copyright THF